விக்கிரவாண்டி எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

20 November 2020, 11:19 am
admk mla muthamizh selvan - updatenews360
Quick Share

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் கூடியதாலும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததாலும் தொற்று பரவலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 14 முதல் 28 நாட்கள் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், முன்கள பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிமுக நிர்வாகிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அதிமுக தலைமையின் உத்தரவின்படி, எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 0

0

0