தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் மீண்டும் ஊரடங்கு: முதலமைச்சர் எச்சரிக்கை!!

23 August 2020, 1:52 pm
Pondy CM Warn- Updatenews360
Quick Share

புதுச்சேரி : வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் புதுச்சேரியில் ஊரடங்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகயை அரசு எடுக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையான காரணத்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்கள் அதிகரித்துள்ளர்.

இந்நிலையில் வீட்டில் தனிமைப்ப டுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பு மற்றும் ஆலோசனை சேவையை இயக்குவதற்கான புதிய தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை மாநில அவசரகால செயல் மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த இலவச சேவை மூலம் நாள் தோறும் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போனுக்கு ஆலோசகர்கள் அழைப்பு விடுத்து அவர்களின் உடல் நலம் குறித்தும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகளை தொடர்பாக தொடர்ந்து 14நாட்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.

சேவையை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே உலாவுவதால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் புதுச்சேரி அரசு தன்னால் முடிந்ததை செய்து வரும் நிலையில் அரசை குறை கூறாமல் மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் வெளியே சுற்றினால் 5 நாட்களில் அவரால் 100நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ஊரடங்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகயை அரசு எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 41

0

0