ஒரு வார காலமாக அதிமுக நிம்மதியாக உள்ளது : பாஜக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2022, 8:07 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தற்போது அதிமுகவினர் நிம்மதியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், நீட் தேர்வானது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் நீட் தேர்வு முறை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை அது முழுக்க  திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டதாகவும், நீட் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சியை குறை சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் நீட் விலக்கு கோரி அதிமுக ஆட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினை நாடியபோது அதற்கான விலக்கினையும் பெற்றபோது நீட்  விலக்கின் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து நீட்டிலிருந்து விலக்கு பெறாமல் போனதற்கு காரணமாக திமுக அரசு செயல்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் நீட், இலங்கை தமிழர் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை, உள்ளிட்ட பல்வேறு தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தமிழகர்களின் நலனுக்கு எதிரானதாகவே  திமுக செயல்படும் எனவும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை நிம்மதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

நீட் மசோதாவை ஆளுநர் இரண்டு காரணங்களைச் சொல்லி தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு  தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறவில்லை உரிய விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை அவர் பெற்றுக் கொண்டு குடியரசு தலைவருக்கு அனுப்ப போகிறார் தொடர்ந்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்பட்டால் ஏற்கனவே அரசு பள்ளியில் பயின்ற  மாணவர்களுக்கு வழங்கபட்ட 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் பயின்று வரும் மாணவ மாணவர்களின் நிலை குறித்து மசோதாவில் தீர்மாணம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 523

0

0