திடீரென துண்டிக்கப்பட்ட ஏர்டெல், வோடாபோன் இணையதள சேவை … திட்டமிட்ட சதியா..? பயனாளர்கள் சந்தேகம்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 5:39 pm
Quick Share

பழனி நகரில் பல இடங்களில் ஏர்டெல்,வோடோபோன் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் முதன்மையான தளமான பழனியில், தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் இணையதள சேவை பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ரயில் நிலைய சாலை, மலை அடிவாரம் மற்றும் மலை மீது என பல இடங்களில் இணையதள சேவை முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது.

இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பயனாளர்கள் பழனியில் செயல்படுத்து வரக்கூடிய அந்த நிறுவனங்களிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். பயனாளர்கள் புகார் மீது தனியார் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஏர்டெல், வோடபோன் போன்ற அனைத்து நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், கடந்த சில மாதங்களாக பழனியில் திடிரென உருவான தனியார் நிறுவனங்கள் வீடுகளுக்கு தனியார் ஊழியர்கள் மூலமாகவும், வயர்கள் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. வயர் மூலம் இன்டர்நெட் சேவையை மக்கள் வீடுகளுக்கு பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்று செயற்கையாக இணையதள பாதிப்பை நிறுவனங்கள் ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

3ஜி, 4ஜி, 5ஜி என அழைக்கற்றலை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பழனி போன்ற சுற்றுலா தளத்தில் தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையை முழுமையாக அளிக்காதது பயனாளர்களுக்கு கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் உடனடியாக இணைய சேவை பாதிப்பை சரி செய்து கொடுக்க வேண்டும், என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 336

0

0