விஜய்யின் கோட்டையில் கொடி நாட்டிய அஜித் : மாஸ் காட்டிய வலிமை… ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 2:34 pm
Kerala Ajith - Updatenews360
Quick Share

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வலிமை படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் வெளியான திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.

Image

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமென்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் படமாக இன்று வெளியானது.

Image

ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, கார்த்திகேயா கும்மகொண்மா உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தாண்டி இன்று படம் வெளியானது. அதிகாலையிலேயே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர்.

Image

எப்போதும் தமிழ் சினிமாவில் இரு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். அதுவும் அஜித் விஜய் என்றால் ரசிகர்கள் அதகளப்படுத்திவிடுவார்கள். அப்படித்தான் இன்று வெளியான படம் விஜய்யின் கோட்டை என கருதப்படும் கேரள மாநிலத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

Image

விஜய் படம் அங்கு வெளியானால் திருவிழா போல கேரள ரசிகர்கள் கொண்டாடுவர். இன்று அதே போல கேரளாவில் வலிமை படம் 250 திரையரங்குகளில் வெளியானது. அங்கு அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களை கடுப்பேற்றும் வகையில் உயராமான அஜித் கட் அவுட் வைத்து மாலை அணிவித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ImranThala/status/1496556614597623809
Views: - 789

0

0