வேங்கைவயலை தொடர்ந்து மீண்டும் பரபரப்பு சம்பவம் : மேல்நிலைத் தொட்டியில் இருந்து வந்த துர்நாற்றம்.. விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 8:16 pm
Dog Dead - Updatenews360
Quick Share

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வழக்கமாக மாதத்தில் 5 மற்றும் 20ம் தேதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று சுத்தம் செய்யப்படாத நிலையில் இன்று சுத்தம் செய்ய மேலே சென்றபோது உள்ளே நாயின் சடலம் கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 தினங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்ததால் குடிநீர் விநியோகம் இல்லாமல் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் வட்டாட்சியர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 339

0

0