ராகுல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்க : அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 மார்ச் 2023, 9:36 மணி
Arjun - Updatenews360
Quick Share

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி இந்துமக்கள்கட்சி அலுவலகத்தில் இந்துமக்கள்கட்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் காருண்யா பால் தினகரன் அவர்கள் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டிருக்கிறார். மூடவர் பார்க்கிறார் செவிடர் கேட்கிறார் என்று மக்களை ஏமாற்றி மோசடி மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த பால் தினகரன் யாழ்ப்பாணத்திலே ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்காக அங்கே சென்று இருக்கிறார்.

அங்கே இருக்கக்கூடிய தமிழ் மக்கள் ஒன்று கூடி மோசடி மதமாற்றத்தை இலங்கையிலே அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள் இலங்கை அரசாங்கம் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து அவருடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு சென்று கொழும்பில் இருந்து அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புயிருக்கிறார்கள்.

இந்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் இங்கே தமிழ்நாட்டிலேயே இந்தியா முழுக்க இந்த மோசடி மதமாற்ற செயல்களுக்கு எதிராக எப்படி இலங்கை அரசு நடவடிக்கை எடுத்ததோ அதேபோல நடவடிக்கை தமிழகத்திலும் அவர் மீது எடுக்க வேண்டும் பால் தினகரனுடைய சொத்துக்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கின்றோம் என்றார்.

தொடர்ந்து ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பரப்பி வந்தார் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் ஆகவே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு எழுதிக் கொடுத்து காந்தியைக் கொன்றது ஆர்எஸ்எஸ் என்று அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.

கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் ஆனால் அந்தப் பிரச்சாரம் பொய் பிரச்சாரம் என்பதை நீதிமன்றத்தில் அவர் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.

தொடர்ந்து மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்திருக்கிறது.

அவதூறு பரப்பி கொண்டிருக்கின்ற கிடைத்திருக்கின்ற தண்டனை எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. ராகுல் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் லண்டனில் சென்று இந்தியாவிற்கு எதிராக மிக மோசமாக இந்தியா குறித்து அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்.

எனவே அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இந்நேரத்தில் முன்வைக்கின்றோம்.

தமிழகத்திலே பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்கள் இந்த பட்ஜெட்டில் லாபம் வருமானம் வரக்கூடிய விஷயங்கள் எல்லாமே தனியாருக்கு அதாவது திமுக குடும்பத்தினர் நடத்துகின்ற அவர்களுக்கு அந்த வரவினங்கள் எல்லாமே நஷ்டத்தில் இயங்குவது எல்லாமே அரசாங்கத்திற்கு அப்படி கணக்கு போட்டுத்தான் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
முதலில் அவருக்கு தமிழ் படிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார். இந்த பட்ஜெட் பயனற்ற பட்ஜெட் எனவே இந்த பட்ஜெட் டில் வெற்று அறிவிப்புகள் தான் இருக்கிறது இந்த பயனற்ற பட்ஜெட் அந்த கருத்துக்களை அவர்கள் மாற்றியமைத்து உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலே நம்முடைய தமிழகத்தினுடைய இப்பவும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை தனிநபருக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று ஆனால் நடந்து கொள்வது வேறுவிதமாக இருக்கிறது எனவே இந்த பட்ஜெட்க்கு எங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து கொள்கிறோம்.

ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவேண்டிய விளையாட்டு ஆனால் தொடர்ந்து தமிழக அரசாங்கம் இந்த விஷயத்தில் நாடகம் போடுகிறது. கவர்னர் மீது தமிழக அரசு பலி போடுகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இடைக்கால சட்டம் மூலம் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். தமிழக அரசுக்கே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீது நம்பிக்கை இல்லை என தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 300

    0

    0