பாசத்தை மிஞ்சிய பணம்… சொத்துக்காக அக்கா குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய தம்பி கைது…!!

Author: Babu Lakshmanan
1 April 2022, 11:12 am
Quick Share

திருச்சி : திருச்சி அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த அக்கா மற்றும் ஒரு வயதான அக்கா மகனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி, வாழவந்தான் கோட்டை அடுத்துள்ளது ஈச்சங்காடு. இப்பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு ஒரு வயதில் சாய்தேவ் என்ற மகன் உள்ளார். அவர் தங்கியிருக்கும் அதே வீட்டின் மாடி பகுதியில் அவரது தம்பி தனக்கோடி தங்கியிருக்கிறார்.

நேற்று தனக்கோடிக்கும், அவரது அக்காள் தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தனக்கோடி அக்காவை அரிவாளால் வெட்டியுள்ளார் இதைக்கண்டு ஓடிவந்த அவரது மகன் சாய்தேவ்வை, குழந்தை என பாராமல் அவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினார்.

இது குறித்து தகவலறிந்த துவாக்குடி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த தனலட்சுமி மற்றும் சாய்தேவ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தம்பி தனுஷ்கோடியை கைது செய்து .விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1100

0

0