ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி : விசாரணையில் திடுக்… சிக்கும் தனியார் நூற்பாலை!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 5:57 pm
Suciide - Updatenews360
Quick Share

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி : விசாரணையில் திடுக்… சிக்கும் தனியார் நூற்பாலை!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பதும் தற்பொழுது திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில் 20 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து அவரை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Views: - 194

0

0