விஜய்க்கு ரியாக்‌ஷன் வரவில்லை.. வில்லன் நடிகர் பேசிய வீடியோ வைரல்.!

Author: Rajesh
19 June 2022, 4:20 pm
beast-updatenews360-1-6
Quick Share

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமின்றி விஜய் என்ற பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் எனவும் கூறினர்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்தச் சமயத்தில் நெல்சனையே விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.

ரஜினி படத்தினை இயக்கும் வாய்ப்பு பறிபோகும் அளவு பீஸ்ட் படத்துகான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்தார் நெல்சன் திலீப்குமார். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக எல்லை மீறி நெல்சன் விமர்சிக்கப்படுகிறார் என அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வில்லனாக நடித்த சாக்கோ கொடுத்திருக்கும் பேட்டி விவாதமாகியுள்ளது. தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ் சினிமாவுக்கே பீஸ்ட் படம் நல்ல என்ட்ரியாக அமையவில்லை. நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.

ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கிவருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், படத்தில் ஏதோ ஒரு பேப்பரை தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார். இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. ஆனால் படக்குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 504

2

0