கட்டிடத் தொழிலாளி கொலை செய்து உடலை தலைகீழாக புதைத்த நண்பர்கள்… காட்டி கொடுத்த செல்போன் சிக்னல் ; 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 5:00 pm
Quick Share

சென்னையில் கட்டிடத் தொழிலாளியை கொலை செய்து உடலை புதைத்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் முத்து (39). இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக காமராஜ் நகர் 3வது குறுக்கு தெரு, பெருங்குடியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். உடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் முத்து(39), கோயம்புத்தூரை சேர்ந்த சந்துரு (22), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா(45) மூவரும் ஒரு மாதமாக வேலை பார்க்கின்றனர். அப்போது, இருவரையும் முத்து மிரட்டி, நான் தான் பெரிய ரவுடி, என்னை மீறி எதுவும் செய்யக்கூடாது என கத்தியை காட்டி தொடர்ந்து மிரட்டி அடித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு ஓட்டு கேட்டா வர்ர’… பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள்… போலீஸில் புகார்..!!

இதனால், கடும் கோபத்தில் இருந்த போது, கடந்த 24ம் தேதி முத்துவும், சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் சந்துரு, முத்துவிடம் இருந்த கத்தியை எடுத்து முத்து முகத்தில் பலமாக வெட்டியுள்ளார். பின்னர், ராஜாவை அழைத்து கத்தியை கொடுத்துள்ளார். அவரும் அதே கத்தியில் வெட்டி கொலை செய்து விட்டனர். இருவரும் சேர்ந்து அருகிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு ராஜா மற்றும் சந்துரு இருவரும் கோயம்புத்தூர் தப்பி சென்று விட்டனர்.

பின்னர், இந்த தகவல் கட்டிட பொறியாளர் மூலம் காவல்துறைக்கு தெரியவர, அதன் பேரில் சந்துருவின் செல்போன் சிக்னலை வைத்து துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் போலீசார் புஷ்பராஜ், மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று இருவரையும் கைது செய்து புதைத்த இடத்திற்கு அழைத்து வந்து, புதைத்த இடத்தை காட்டி உறுதி செய்தனர்.

மேலும் படிக்க: கவனத்தை ஈர்த்த கடப்பா.. சொந்த மாமாவை எதிர்த்து களமிறங்கும் YS ஷர்மிளா : மாஸ்டர் பிளான்!

பின்னர், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார், தடயவியல் உதவி இயக்குநர் அன்வர் ஆகியோர் முன்னிலையில் பள்ளம் தோண்டி முத்துவின் உடலை எடுத்தனர். முத்துவின் உடலை தலைகீழாக புதைத்துள்ளனர். இதனைக் கண்ட முத்துவின் உறவினர்கள் கதறி கண்ணீர் விட்டு அழுதனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் பேட்டியளிக்கும் போது, எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. 500 ரூபாய்க்காக கொலை நடந்ததா..?, முகம் சிதைந்துள்ளது எனவும், அனைவரையும் விசாரிக்க வேண்டும், கொலை செய்தவர்களின் முகத்தை எங்களுக்கு காட்ட வேண்டும், என்றனர்.

Views: - 132

0

0