பேரிகார்ட் மீது மோதிய பைக்… ஸ்பாட்டில் உயிரிழந்த தொழிலதிபர் : திக் திக் காட்சி!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 5:17 pm
Dgl Accident - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பேரிகார்டில் மோதி தொழிலதிபர் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்துள்ளது.

கரூர் மாவட்டம் பவளபுரியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இளங்கோ இவர் நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் கருவறையை நோக்கி வந்து கொண்டிருந்தார்

அப்போது வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் என்னுமிடத்தில் திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் தற்போது இது குறித்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 651

0

0