சாதித் திமிரு காக்கிச்சட்டைக்கும் இருக்கு.. வெள்ளை சட்டைக்கும் இருக்கு : திருமாவளவன் கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 4:41 pm
Thirumavalavan - Updatenews360
Quick Share

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் மனித உரிமை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பழங்குடி இருளர் மனித உரிமை மாநாட்டின் நூல் வெளியிடப்பட்டன. பேராசிரியர் கல்யாணி என்ற பிரபா கல்வி மணி நூலை வெளியிட்டார்.

பின்னர் பேசிய தொல். திருமாவளவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு கடந்த 1979 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் பழங்குடியினர் நூற்றுக்கு ஒரு சதவீதம் அடிப்படையில் மொத்தமாக ஏழரை கோடி பேர் இருக்கிறார்கள். இதனால் அரசியல்வாதிகள் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல்துறைகள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றார்.

மேலும் பேசிய அவர் சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் பலர் தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். அதிலும் காவல்துறையினர் இவர்கள் கொடுக்கும் புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சாதி திமிர் காக்கிச்சட்டைக்கும் வெள்ளை சட்டைக்கும் இருக்கிறது.

சனாதனம் என்பது கீழ அவர் மேல அவர் என பிரிக்கப்பட்டு பேசப்பட்டு வருகின்றன. தற்பொழுது இன்று நடைபெற்ற பழங்குடி இருளர் மனித உரிமை மாநாடு என்பது அல்ல. இது சனாதனர்கள் மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு, பார்ப்பனுக்கு எதிரான மாநாடு, ஆர் எஸ் எஸ் க்கு எதிரான மாநாடு, மோடிக்கு எதிரான மாநாடு என்றும் பேசினார்.

மேலும் பேசிய அவர் நாட்டில் பார்ப்பனருக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை. அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் என செய்து வருகின்றனர்.

பார்பனர்களுக்கு எடுபிடிகள் சர்வர்கள் எனவும் அவர் பேசினார். மேலும் பேரு பெத்த பேரு, செய்வது வாட்ச்மேன் வேலை, பதவி பெயர் என்றால் பிரதமர் வேலை பார்ப்பது.

மோடி அமித்ஷா ஆகிய இருவரும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் பார்ப்பனர்க்கு மட்டுமே செயல்பட்டு வாட்ச்மேன் வேலை பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.

Views: - 207

0

0