திருட்டு நகை வாங்க மறுப்பு : கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிய கும்பல்…! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Author: kavin kumar
21 January 2022, 7:53 pm
Quick Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் திருட்டு நகை வாங்க மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  கேசாராம் என்பவரது மகன் தர்மாராமன் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை கடை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்தபோது வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியை சேர்ந்த சாம்மூர்த்தி என்பவருடைய மகன் சிலம்பரசன்  நகை ஒன்று அடகுவைக்க வந்துள்ளனர். அப்போது தர்மாராமன் சேட்டு சந்தேகத்தின் காரணமாக நகை அடகு வைக்க மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மாலை மீண்டும் ஆத்திரத்துடன் கடைக்கு குடிபோதையில் வந்த சிலம்பரசன் கடைக்குள் புகுந்து தர்மாராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த தர்மாராமனை மீட்டு அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாளம் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியின் ஆதாரத்தை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 3386

0

0