கோவை ஜல்லிக்கட்டு நிறைவு : காரை தட்டிச் சென்ற மதுரை இளைஞர்

Author: kavin kumar
21 January 2022, 8:02 pm
Quick Share

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் 21 காளைகளை பிடித்து முதல் பரிசான கார் ஒன்றை வென்றுள்ளார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தலால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அபிநாத் என்ற மணி 21 காளைகளை அடக்கி முதல் பரிசான ஆல்டோ 800 காரை அமைச்சரிடம் பெற்றார்.

மதுரை பிரபாகரன் 19 காளைகளை பிடித்து இரண்டாம் பரிசான யமஹா பைக்கை வென்றார்.திண்டுக்கல் மாவட்டம் நந்தத்தை சேர்ந்த கார்த்திக் 18 மாடுகளை பிடித்து மூன்றாம் பரிசான ஹெக்ஸ்எல் சூப்பர் இரு சக்கர வாகனத்தை வென்றுள்ளார்.

Views: - 2812

0

0