நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட மர்ம கும்பல்.. துணிச்சலாக விரட்டியடித்த காவலர்… நேரில் அழைத்து பாராட்டிய ஆணையர்…!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 1:34 pm

நீதிமன்றத்தில் கத்தியோடு புகுந்த நபரை துப்பாக்கி முனையில் விரட்டியடித்த காவலருக்கு சென்னை காவல் துறை ஆணையர் பாராட்டியுள்ளார்.

சென்னை மாதவரம் பால்பண்ணை போலீசார் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது, கத்தியுடன் விக்னேஸ்வரன் என்ற நபர் மூன்று நபர்களை வெட்டுவதற்காக தயார் நிலையில் இருந்துள்ளார். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.

அப்போது, மிகவும் துணிச்சலாக, அங்கு காவலுக்கு நின்று இருந்த துப்பாக்கி ஏந்திய காவலர் அரிதாஸ், விக்னேஸ்வரனைப் பார்த்து துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என கூறி, அங்கிருந்து கிளம்புமாறு உத்தரவு போட்டார். உடனே பயந்து போன விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

குற்றவாளிகளை கத்தியால் தாக்க வந்த நபரை தடுத்த ஆயுதப்படை காவலர் அரிதாஸ் என்பவரை , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

  • mysskin asks 5 lakhs for speech in cinema functions 5 லட்சம் இல்லைனா எனக்கு ஃபோன் பண்ணாதீங்க- மேடையில் புது கண்டிஷன் போட்ட மிஷ்கின்?