கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

11 August 2020, 5:09 pm
kelavarapalli dam - updatenews360
Quick Share

சென்னை : கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிருஷ்ணகிரி மாவட்டம்‌, ஒசூர்‌ வட்டம்‌, கெலவராப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய்‌ பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்து விடுமாறு வேளாண்‌ பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. வேளாண்‌ பெருமக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம்‌, ஒசூர்‌ வட்டம்‌, கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு நாளை முதல்‌ டிச.,12 வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில்‌ இரு பிரதானக்‌ கால்வாய்களில்‌ தண்ணீர்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌ கிருஷ்ணகிரி மாவட்டம்‌, ஒசூர்‌ வட்டத்தில்‌ உள்ள 8000 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. மேலும்‌, விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.