குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க உத்தரவு

8 September 2020, 3:34 pm
CM Speech- Updatenews360
Quick Share

சென்னை : பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-திருவண்ணாமலை மாவட்டம்‌, சாத்தனூர்‌ அணையிலிருந்து குடிநீர்‌ தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில்‌ தண்ணீர்‌ திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வைத்துள்ளன. இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, சாத்தனூர்‌ அணையிலிருந்து நாளை முதல்‌ 6 தினங்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர்‌ தேவைகளுக்காக சாத்தனூர்‌ அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில்‌ எல்லீஸ்‌ அணைக்கட்டு வரை தண்ணீர்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌, விழுப்புரம்‌ மாவட்டம்‌ குடிநீர்‌ வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0