இடபங்கீடுக்காக கூட்டணி உறவை சிதைத்துக் கொள்ள முடியாது : கட்சியினருக்கு விசிக தலைவர் ஆர்டர்.!!

Author: kavin kumar
3 February 2022, 10:48 pm
Quick Share

சென்னை : நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு கேட்கப்பட்ட இடங்களை திமுக கூட்டணியில் ஒதுக்காததால், நாமக்கல் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- ஆத்திரத்தால், வருத்தத்தால் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தால், அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வார்டு கவுன்சிலர் அல்லது கவுன்சிலர் தொகுதிக்காக ஒரு கூட்டணி உறவை நாம் சிதைத்து கொள்ள முடியாது. எனவே தனித்து போட்டியிடும் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Views: - 399

0

0