‘சாம்பாருல என்ன எல்லாம் போடுவீங்க’… பள்ளியின் சமையலறைக்கே சென்ற மாவட்ட ஆட்சியர்.. சாப்பாட்டை ருசித்து பார்த்து ஆய்வு..!!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 12:28 pm
Quick Share

பொள்ளாச்சி அருகே சமையலறையில் சாப்பாட்டை ருசித்து பார்த்து ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர், மாணவர்களுக்கு பாடம் எடுத்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாவட்டகலெக்டர் கிராந்திகுமார்பாடியை மாணவ மாணவிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையலறைக்கு நேராக சென்று, அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சாம்பாரை பார்வையிட்டார்.

பின்னர், மாணவர்களுக்கு சமைத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு சுவைத்து பார்த்து மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது. சாம்பாரில் என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அங்கிருந்த பள்ளி வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாணவியை அழைத்து வாய்ப்பாடு சொல்ல கூறினார். அப்போது, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் வாய்ப்பாடு ஒப்பித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேள்விகள் கேட்டார். அப்போது, மாணவர்கள் போலீஸ், இன்ஜினியர் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறி, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்றார்.

Views: - 316

0

0