கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்

29 January 2021, 9:35 am
Quick Share

கோவை: கொரோனா காலத்தில் பணியாற்றி செவிலியர்களுக்கு சிறப்பு தொகுப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கவனிக்க ஆள் இன்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைபணியாளர்கள் பணி அளவிடற்கரிய பணியாக அமைந்தது.

உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் பணிபுரிந்தது பலதரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றது. இதற்காக முன் களப்பணியாளர்களான இவர்கள் பல்வேறு விதமாக பாராட்டப்பெற்றனர்.

இந்த நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு சிறப்பு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்றும், 5 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

செவிலியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Views: - 0

0

0