மாணவர்கள் – வடமாநிலத்தவர்களிடையே நடந்த மோதல் உண்மைதான்… காரணம் என்ன தெரியுமா..? கோவை கல்லூரி நிர்வாகம் சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 5:38 pm
Quick Share

சூலூரில் மாணவர்கள் – வடமாநிலத்தவர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்த கல்லூரி நிர்வாகம், மோதல் கைகலப்பாக மாறியதற்கான காரணம் என்ன..? என்பதை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் விடுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன் கூறியதாவது:- நேற்று இரவு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வடமாநில நபர்கள் உணவு பரிமாறிய போது, அசைவ உணவு அதிகமாக வேண்டும்படி மாணவர்களிடம் வடமாநில இளைஞர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த மொழி புரியாததன் காரணமாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில், கல்லூரி மாணவர் இருவருக்கும் வடமாநில இருவருக்கும் காயம் ஏற்பட்டது. சிறுகாயம் என்பதால் முதல் உதவி செய்யப்பட்டது. தற்போது கல்லூரி வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்கள் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை, என தெரிவித்தார்.

Views: - 354

0

0