கோவையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் இன்று ஏர் கலப்பை பேரணி…!!!

22 November 2020, 7:26 am
Congress_Flag_UpdateNews360
Quick Share

சென்னை: வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஏர் கலப்பை பேரணி நடைபெற உள்ளது.

தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக 22ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடும், மாலை 5.30 மணியளவில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது.

Nellai KS Alagiri Byte - updatenews360

இந்த மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்லபிரசாத் மற்றும் சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

இம்மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 19

0

0