ஆண்களை அதிகம் விரும்பும் கொரோனா : 30 முதல் 39 வயது நபர்களே உஷார்… சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!!!

8 April 2021, 12:40 pm
Corona_test_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,459 பேருககு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரையில் 10,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4, 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 23,77,375 பயணிகளை பரிசோதனை செய்ததில் 425 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே என்பது தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரையில் 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Views: - 2

0

0

Leave a Reply