சென்னைக்கு வந்த கொரோனா தடுப்பூசி : ஒரு நபருக்கு இத்தனை முறை சோதனையா?!!

4 September 2020, 11:08 am
Covid Medicine - Updatenews360
Quick Share

சென்னை : இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தடைந்தது.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் ஸ்தம்பித்தது மட்டுமல்லாமல் ஏராளமான பலி எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இதற்கான மருந்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. அந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று சென்னை வந்தடைந்தன.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசி, டெல்லியில் உள்ள ஷீரம் இன்ஸ்டியூட் மூலமாக தமிழகம் வந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்கட்டமாக 300 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து நேற்று சென்னை வந்துள்ளதாகவும், சென்னை ராஜீவ் காந்தி மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் உள்ள 300 பேர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக இந்த தடுப்பூசி ஒரு நபருக்கு இருமுறை செலத்தப்பட உள்ளது. முதல் தடுப்பூசி செலுததிய பிறகு நான்கு வாரம் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக நல்ல திடமான 150 பேரை தேர்வு செய்யம் நடவடிக்கைகளில் இரு மருத்துவமனைகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Views: - 0

0

0