பட்டப்பகலில் வாலிபர் வெட்டிப் படுகொலை : சுய உதவிக்குழு கொடுக்கல் – வாங்கல் தகராறால் நிகழ்ந்த விபரீதம்..!!

12 November 2020, 6:59 pm
murder attempt - updatenews360
Quick Share

கரூரில் சுய உதவிக்குழுவில் கொடுக்கல் – வாங்கலில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை அடுத்த தாந்தோன்றிமலை காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கணபதிபாளையம் வடக்கு தெரு பகுதியினை சேர்ந்தவர் மதன்ராஜ் (27). இவரது தாய் சுமதி. இவர் கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியினை சார்ந்த கணபதிபாளையம், வடக்குத்தெருவில் வசித்து வந்த நிலையில், மதன்ராஜின் தாயார் சுமதி சுய உதவிக்குழுவில் துணை தலைவியாக இருந்து வந்துள்ளார்.

அதே தாந்தோன்றிமலை பகுதியினை சார்ந்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியினை சார்ந்த மோகன்ராஜ் (27). இவரது அத்தை மகள் அதே சுய உதவிக்குழுவில் பணம் நிதியாக வாங்கிய நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்ட வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே இந்த தகராறு வாய்வழியாகவும், அடிதடியாகவும் நீடித்துள்ளது.

இந்நிலையில், வாக்குவாதம் நீண்டதால் இருசக்கர மோட்டார் ரேஸ் வாகனத்தில் கூர்மையான ஆயுதங்களான கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தின் சைலன்ஸர்களை எடுத்துக்கொண்டு மதன்ராஜ் மற்றும் அவரது சித்தி மகன் பூபதியும், பகையை தீர்க்க சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இது முன்னதாகவே தெரிந்து கொண்ட மோகன்ராஜ், அவரது வீட்டிலும் அரிவாள் மற்றும் கத்திகளை பதுக்கி வைத்திருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

karur murder - updatenews360

இருதரப்பினரும் சந்தித்த போது முதலில் வாய் வார்த்தையில் ஆரம்பித்த சண்டை, பின்னர் பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், கொலை செய்ய சென்ற மதன்ராஜ் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவருடன் சென்ற பூபதிக்கு கத்திக்குத்து மற்றும் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீஸார் மற்றும் கரூர் நகர துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கொலையான மதன்ராஜின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டப்பகலில் கொலை சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 31

0

0