கனமழையால் மிதக்கும் மண்டைக்காடு.. குடியிருப்பை காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் மூட்டைகளில் மண் சுமக்கும் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

Author: Vignesh
7 November 2022, 4:32 pm
Rain - updatenews360 2
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை வெள்ளம். வீடுகளில் புகாமல் இருக்க கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு சாக்கு மூட்டைகளில் மண் நிரப்பி அணைபோடும் குடியிருப்பு வாசியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்பற்று கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதியோ,மழை நீர் செல்ல வடிகால் வசதியோ இல்லை என கூறப்படுகிறது.

வருடா வருடம் மழைக்காலங்களில் இந்த குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கழிந்த பத்து வருடங்களாக இந்த கிராம மக்கள் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி கேட்டு மண்டைக்காடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையில் அந்த குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.

தொடந்து பெய்த கனமழையால் ஆறு போல் பெருக்கெடுத்த மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணி என்பவர் தனது உறவினர்கள் குழந்தைகளுடன் கொட்டும் மழையில் ஆபத்தை உணராமல் சாக்கு மூட்டைகளில் மண்ணை நிரப்பி ஆறு போல் ஓடும் மழை வெள்ளத்தை தடுத்து அணை போட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கொட்டும் மழையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு வாசி குடும்பத்தோடு மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த அணை போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 404

0

0