சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்: டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 5:38 pm
Quick Share

விழுப்புரம்: சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (26). இவர், சென்னை காமராஜர் சாலை டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

image

இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெளியே உதவி ஆய்வாளர் பிரசன்னா சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் உதவி ஆய்வாளரான பிரசன்னா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

image

இதற்கிடையே இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் உடலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் காவல்துறை அதிகாரிகளும் பிரசன்னாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Views: - 231

0

0