அதிகரிக்கும் சர்க்கரை நோயாளிகள்… ஒரு மணி நேரம் பயணித்து வந்து ‘டயாலிசிஸ்’ சிகிச்சை… நோயாளிகள் பெரும் அவதி!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 4:47 pm
Quick Share

அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை எதிர்பார்த்த வளர்ச்சியை நோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் நீண்டு வருகின்ற நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகள் பெருகி வருவதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை அளிக்காததால் ஏராளமான நீரிழிவு நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடி டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க: இதையாவது செய்ய துப்பு இருக்கிறதா..? பரபரப்பை உண்டாக்கிய சுசித்ரா ; திமுகவை விளாசும் அதிமுக..!!

அதுமட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்படுவது சகஜம் என ஆகிவிட்ட நிலையில், அதற்கு உண்டான மருந்துகள் இல்லை என்பதும், மாத்திரைகள் தட்டுப்பாடு என்பதும், நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிறுநீரகம் செயலிழிந்தவர்களுக்காக, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அன்றாடம், காலை 7:00 மணிக்கு முதல் ஷிப்டும், மதியம் 12:00 மணிக்கு இரண்டாவது ஷிப்டும், இரவு 7:00 மணிக்கு மூன்றாவது ஷிப்டும் என மூன்று வேலைகளில், ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் நகர்ப்பகுதி, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, ரெகுலர் சிறுநீரக மருத்துவர் இல்லாமல், செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரியில் இருந்து வரவழைக்கப்பட்டு பொறுப்பு மருத்துவர் வாயிலாக, இந்த ‘டயாலிசிஸ்’ யூனிட் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நெடுந்தொலைவில் இருந்து வரும் ‘டயாலிசிஸ்’ நோயாளிகள், காஞ்சிபுரம் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் போன்ற இடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் பயணித்து காஞ்சிபுரம் வருவதோடு, நான்கு மணி நேரம் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வீடு திரும்ப மிகுந்த சிரமமாக இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் வீடு திரும்புவது மேலும் சிரமமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாலுகா மருத்துவமனைகளில், இந்த சிகிச்சை அளிக்கப்படாததால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று தாலுகா மருத்துவமனைகளிலும், தலா இரு ‘டயாலிசிஸ்’ இயந்திரங்களை கொண்டு, ‘டயாலிசிஸ்’ சிகிச்சையை துவக்க, சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 128

0

0

Leave a Reply