பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு பணி…. உதவி செய்வதாக கனிமொழி எம்.பி. உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 5:33 pm
Kanimozhi - Updatenews360
Quick Share

கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்த கனிமொழி கருணாநிதி எம்.பி.

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார்.

இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று (23/06/2023) காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார்.

இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. விசாரித்ததில், கனிமொழியுடன் வந்த சிலரிடம் பணியில் இருந்து பெண் நடத்துநர் டிக்கெட் கேட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே வாங்கிவிட்டதாக கூறியும், அநத் பெண் வேண்டுமென்றே டிக்கெட் கேட்டதாகவும், இது குறித்து பணி முடிந்து சென்ற ஓட்டுநர் ஷர்மிளா பேருந்து உரிமையாளரிடம் பேசும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, மன உளைச்சலால் வேலையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த கனிமொழி எம்.பி அவர்கள் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

Views: - 410

0

0