குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்… வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளருக்கு சான்றிதழ் : மதுரையில் பரபரப்பு!!

Author: kavin kumar
23 February 2022, 6:54 pm
Quick Share

மதுரை : டி.கல்லுப்பட்டியில் குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக மதுரை ஆட்சியரிடம் சுயேட்சைகள் வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உள்ளிட்ட 9 பேரூராட்சிகளில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 552 போ் போட்டியிட்டு நடைபெற்ற தேர்தலில் கடந்த 19 ந் தேதி பேரூராட்சிகளில் 79.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பேரூராட்சிகளுக்கான 22ந் தேதி வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அருகே உள்ள டி.கல்லுப்படி பேரூராட்சியில் 10 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ராமகிகிருஷ்ணன் என்பவரின் மனைவி பழனிச்செல்வி போட்டியிட்டார். டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்பு லெட்சுமி என்பவரும், சுயேட்சை வேட்பாளரான பழனிச்செல்வியும் ஆகியோருக்கு 284 வாக்குகளை சரி சமமாக பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறிய நிலையில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்களை அங்கிருந்து வெளியேற்றி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரை தேர்ந்தெடுத்தனர். குலுக்கல் முறையில் சுசேட்சை வேட்பாளர் பழனிச்செல்வியின் பெயர் வந்த போதும், திமுக வேட்பாளர் சுப்பு லெட்சுமி வெற்றி பெற்றதாக முறைகேடாக சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும்,

குலுக்கல் முறையில் தன்னுடைய பெயர் வந்ததற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் காவல்துறையினர் பதிவு செய்த வீடியோ கேமராவில் உள்ளதாக கூறி எனவே மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 3 வேட்பாளர்கள் புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் கண்டிப்பாக பதில் சொல்கிறேன் என்று கூறினார்.

image
Views: - 679

0

0