திமுக பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த வார்டில் நீடிக்கும் குடிநீர் பிரச்சனை ; எட்டிக்கூட பார்க்காத துணை தலைவரால் பொதுமக்கள் அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 9:41 am
Quick Share

திமுக பேரூராட்சி துணைத் தலைவரின் சொந்த வார்டில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால் அதிருப்தியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அலமேலுபுரம் 9வது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க, அங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த தொட்டியின் மேல் போடப்பட்ட கான்கிரீட் மூடியும், மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டு வந்த நிலையில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவின் விளைவாக, கடந்த மாதம் தற்காலிக மேல்தளம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் திமுக பேரூராட்சி துணை தலைவரான ரவி எங்களிடம் வாக்கு கேட்டு வரும் போது, எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

அதை செய்து தருகிறேன் என உறுதியளித்து வாக்கும் பெற்று வெற்றி பெற்றார். பிறகு, இதுவரையில் ஒரு நாள் கூட இந்த பகுதிக்கு வரவில்லை. தனது சொந்த வார்டை எட்டி பார்க்காத நபராக உள்ளார், என பொதுமக்கள் தெரிவித்தனர்

Views: - 381

0

0