16 வயது சிறுமிக்கு திமுக பஞ்சாயத்து தலைவர் மகன் பாலியல் தொல்லை : நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தாய்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
26 April 2022, 4:27 pm
Quick Share

விருதுநகர் : விருதுநகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சிறுமியின் தாயார் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தைச் தெய்வானை என்பவர் 16 வயது மகளுக்கும், அதே பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரையின் மகன் சுலைமானுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. சுலைமான் அந்த பதினாறு வயது சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்து சுலைமான் இடம் கொடுக்க சென்றபோது, சுலைமான் குடும்பத்தார்கள் செந்தாமரை மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தெய்வானையையும், ராஜாவையும் அடித்ததாக கூறப்படுகிறது.

பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவர் சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த தேவயானை மற்றும் அவரது மகன் இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அங்குள்ள காவல் துறையினர், அதனை தடுத்து நிறுத்தினர். அப்போது, பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண்ணிற்கு தீடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Annamalai Protest - Updatenews360

திமுக பிரமுகரின் மகன் செய்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பாஜக தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் நீதி கேட்டுச் சென்ற பொழுது தங்களைத் தாக்கிய திமுக தலைவரின் உறவினர்களையும் உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற தாய்!

தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பாஜக தயங்காது!, என தெரிவித்துள்ளார்.

Views: - 970

0

0