வரி இல்லாம இலவசமா குடிநீர் இணைப்பு கொடு.. அரசு அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய திமுக பிரமுகர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 5:07 pm
DMK - Updatenews360
Quick Share

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் யுவராணி. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் தங்கதுரை தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டுள்ளார்.

அதற்கான உரிய வரியை செலுத்துமாறு அலுவலர் கூறிய நிலையில், வீட்டின் முன்பு இலவச பொது குடிநீர் இணைப்பு அல்லது குறைவான கட்டணத்திற்கு குடிநீர் இணைப்பு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் அதிகாரியை ஒருமையில் பேசி திட்டி உள்ளார்.

இதையடுத்து செயல் அலுவலர் யுவராணி மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தங்கதுரை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 225

0

0