திராவிடத்திற்காக தமிழை உதறித்தள்ளிய திமுக… இப்ப தமிழ்நாட்டை பற்றி பேசலாமா..? கிருஷ்ணசாமி கேள்வி

Author: Babu Lakshmanan
14 January 2023, 11:42 am
Quick Share

தமிழ்நாட்டை மாநிலமாக பார்க்காமல் தனிதேசமாக கருதி பிரிவினைக் கருத்துக்களை திமுக உருவாக்கி வருவதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழாவிற்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். அப்பகுதியில் அமைக்கப்பட்ட கொடி மரத்தில் புதிய தமிழகம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சுதந்திரம் பெற்ற 76 ஆண்டுகள் ஆகியும் சமுதாய மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படவும், உருவாக்கவும், என் ஜாதி மத பிணக்குகளை அகற்றுவதற்கோ, எந்த கட்சியும் முயலவில்லை. அதற்காகவே, இந்த தேசிய ஒருமைப்பாட்டு புதுமை பொங்கல் விழாவை, இந்த ஆண்டு முதல் அடுத்த வருடம் எல்லா ஆண்டுகளிலும் அனைத்து சமுதாயத்திலும் ஒன்றிணைத்து பொங்கல் விழா நடத்துவோம்.

பூகோள ரீதியாக இந்தியா ஒரே நாடு. பல தேசமாக 625 சமஸ்தானங்களாக இருந்து 1947க்கு பிறகு அனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட தேசமாக இந்தியா உருவாக்கப்பட்டது. ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது வேறு. அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சேரும் வகையில், மத்திய மாநில மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் என மூன்று விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

திமுக தமிழ்நாட்டை மாநிலமாக பார்க்காமல் தனிதேசமாக கருதி பிரிவினைக் கருத்துக்களை உருவாக்கி வருகின்றது. அந்த அடிப்படையில் தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும், திராவிடர் மாடல் ஆட்சி என்றும் கூறி பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். மொழிவாரியமாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ் என்று சொல்வதைக் கூட தவிர்த்து திராவிடம் என்று பெயரில் திமுக இயங்கி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஒரு அங்கமாக தமிழ்நாடு திகழ்வதால் ஆளுநர் தமிழகம் என்று அழைத்துள்ளார். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக தான் உள்நோக்கத்துடன் கவர்னரின் உரையை சட்டசபையில் நீக்கி உள்ளது. இந்தியாவின் பெயர் பாரதம், மகாபாரதம், ராமாயணம் என பல வரலாறுகள் உண்டு. திமுக இவை அனைத்தையும் கற்பனை என்று நினைத்து வருகிறது.

CM Stalin - Updatenews360

பூகோளம் ரீதியாக இமயமலை கடலுக்குள்ளும், குமரியினை மேலே இருந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலை மேலே கீழேயும் தாழ்ந்துள்ளது. இது உண்மை எனில், இரு தேசங்களுக்கும் இடையே பாலம் இருப்பது உண்மைதான். 1964இல் தனுஷ்கோடி நீருக்குள் மூழ்கியது, அனைவரும் அறிந்ததே.

எனவே சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டு விட்டு இந்தியாவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். கிராமங்களில் சாலைகள் போட வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் முதலில் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதேபோல் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா பரவி இருக்கிறது, என பேசினார்.

Views: - 369

0

0