மும்பையில் இருந்து வந்த தங்கம்… சுமார் ரூ.4.50 கோடி மதிப்பு… பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 5:15 pm
Quick Share

மும்பையில் இருந்து வந்த தங்கம்… சுமார் ரூ.4.50 கோடி மதிப்பு… பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!!

திண்டுக்கல்லில் நாலரை கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், வருவான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் RS ரோடு பகுதியில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தபாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அந்த வழியாக வந்த வாகனத்தின் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 4.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க: ‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்… இனி பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம்’ ; கூட்டணியை விலகிய கோவை மாவட்ட பாமக..?

தங்க நகைகளுக்கான ஆவணங்களை பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில், மும்பையிலிருந்து விமானம் மூலமாக மதுரை கொண்டு வரப்பட்டு நத்தம், திண்டுக்கல் மற்றும் திருச்சியில் உள்ள நகைக் கடைகளுக்கு தங்கநகைகள் கொண்டு வந்ததாக கூறினர். தங்கத்திற்கான உரிய ஆவணம் உள்ளதா..? என வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 86

0

0