42 ஆண்டுக்கு பிறகு நடந்த அவலம்… திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை எடப்பாடியார் வைப்பார் ; முன்னாள் அமைச்சர் காமராஜ்

Author: Babu Lakshmanan
17 January 2024, 3:56 pm
Quick Share

மேட்டுர் அணை 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுக ஆட்சி மலரும் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை ஒட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் தேரடியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று தெற்குவீதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது :- விவசாயிகளை அதிமுக பாதுகாக்கிறது என்று அழுத்தமாக சொல்ல முடியும். விவசாயிகளுக்கு எடப்பாடியார் ஆட்சியில், அம்மா ஆட்சியில், புரட்சி தலைவர் ஆட்சியில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.

மேட்டுர் அணை 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்தது கொண்டிருக்கிறார்கள். அந்த முற்றுப்புள்ளிதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா, அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும், என்றார்.

இதில் கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் , மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் , மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் , முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கர் , பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிரணி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 237

0

0