செய்ய முடியாது என தெரிந்தும் ஏன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தீர்கள்..? திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கேள்வி…!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 9:00 am
Quick Share

அதிமுக ஆட்சியில் செயல்பட்டிலிருந்து நலிவடைந்த பேருந்துகளை சரி செய்து தலைநிமிர்த்தி காட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:- 22 ஆயிரம் பேருந்துகள் சிறப்பான பேருந்துகளை அதிமுக ஆட்சியில் செயல்பட்டிலிருந்து நலிவடைந்த பேருந்துகளை தலைநிமிர்த்தி காட்டினோம். அதிமுக ஆட்சியில் விதவிதமான பேருந்துகள், குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள், ஏழை மக்களும் சாதாரணமாக பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது

பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகள் நவீனமயமாக்கப்பட்ட குளிர்சாதன பேருந்துகளாக இயக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு அம்மா ஆட்சி காலத்தில் 12,000 புதிய பேருந்துகளை கொண்டுவரப்பட்டது. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஜெர்மன் வங்கியில் வட்டியில்லா கடனாக 3,650 கோடி ரூபாயில் எலக்ட்ரிக் பேருந்துகளுக்கும், பிஎஸ் 6 பேருந்துகளுக்கும், மூன்று வருடங்களுக்குப் பிறகு 100 பேருந்துகளை விட்டு விட்டு பெருமை தேடி வருவது திமுக அரசு.

கொரோனா காலத்தில் எட்டு மாதம் பேருந்துகள் இயங்காத நிலையில், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 50 சதவீதம் சம்பளம் வழங்கினர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் 100 சதவீதம் ஊதியத்தை வழங்கியது அப்போது, ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருந்த அதிமுக அரசு.

தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான தேர்தல் வாக்குறுதி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் எனக் கூறி, திமுகவிற்கு வாக்கு செலுத்திய அரசு ஊழியர்களை ஏமாற்றியது தான் திமுக அரசு. நிதியில்லை என கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது. அப்படி என்றால் ஏன் தேர்தல் வாக்குறுதி கொடுக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 950 கோடி ரூபாய் ஓய்வூதியதாரர்களுக்கு பாக்கி வைத்த தான் திமுக அரசாங்கம். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை இல்லாமல் அனைத்தையும் வழங்கியது முன்னாள் முதல்வர் எடப்பாடியார். 5000 பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் டயர், பிரேக் ஷூ, உதிரி பாகங்கள் இல்லாமல் நிற்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சௌந்தர்ராஜன் 6,000 பேருந்துகளுக்கு உதிரி பாகங்கள் இல்லாமல் பேருந்துகள் நிற்பதாக கூறுகிறார்.

Views: - 367

0

0