எம்ஜிஆரைப் போல எடப்பாடியாருக்கும்.. ஓபுளா படித்துறையும், அதிமுகவும்… ரகசியத்தை வெளியிட்ட செல்லூர் ராஜு..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 5:12 pm
Quick Share

மனசாட்சியை அடகு வைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருநாவுக்கரசு பேசியிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையம் அருகில் வருகின்ற இருபதாம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு வகையில் விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் இருக்கக்கூடிய ஓபுலா படித்துறையிலிருந்து இருசக்கர விழிப்புணர்வு வாகன பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை கொடிய சேர்த்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து தொண்டர்களோடு இணைந்து திறந்தவெளி அமைப்பாக இருக்க கூடிய நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தார்.

இந்த இருசக்கர வாகன பேரணியானது, முனிச்சாலை சாலை வழியாக அண்ணாநகர் வழியாக வந்து இறுதியாக அண்ணாநகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை அருகே நிறைவு பெற்றது.

கட்சித் தொண்டர்களுடன் இணைந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களை சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது :- 1980 இல் புரட்சித்தலைவர் உடைய ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இந்த ஆட்சி அவ்வளவுதான், எம்ஜிஆர் சினிமாவுக்கும் போக முடியாது, அரசியலும் பண்ண முடியாது என்ற அரசியல் விமர்சகர்கள், கலைஞருடைய அபிமானிகள் எல்லாம் நினைத்தனர்.

அந்த நேரத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் ஆளுகின்ற அன்னை இந்திரா காங்கிரஸும், கலைஞர் கருணாநிதி கட்சியும் 50 சதவீதம் சீட்டு ஒதுக்கி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள்.

இவர் தன் சந்தித்த நேரத்தில் நிச்சயமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை என்கின்ற நிலையை, எல்லா அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும், ஊடகங்களும் அன்றைக்கு தெரிவித்தனர்.

இந்த சமயத்தில் ஒபுலா படித்துறையில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மிகப்பெரிய கண்டன ஊர்வலத்தை ஏற்பாடு செய்தோம். மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. மறக்க முடியாத ஒன்றாக கழகத்தின் வரலாற்றில் அமைந்தது. பல்வேறு நிகழ்வுகள் ஓபுலா படித்துறையில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் தொடங்கினால் அதிமுகவிற்கு என்றும் வெற்றிதான். அதன் அடிப்படையில் வருகின்ற காலம் அதிமுகவின் காலம்.

இந்த பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெறும். இந்த மாநாட்டிற்கு பிறகு திமுக ஒரு தேய்பிறையாக தான் இருக்கும். திமுக ஆட்சி மிக விரைவில் மக்களால் தூக்கி எறியப்படும் என்கின்ற நிலை ஏற்படும். அதற்கு அச்சாரம் கூறுகின்ற வகையில் இன்று தொண்டர்கள் ஆர்ப்பரித்து இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள்.

நேற்று இரவு தான் உரிய அனுமதி கிடைக்கப்பெற்றது. நேற்று இரவுக்கு பிறகு இவ்வளவு தொண்டர்களிடத்தில் கைபேசி மூலமாக சொல்லி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றால், இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பதாகவே அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் மாபெரும் பேரணியாக அமைந்திருக்கும்

தற்போது அங்கிருந்து 15 நிமிடத்திற்குள்ளாக நாங்கள் வந்திருக்கிறோம். எந்த ஒரு பொதுமக்களுக்கும் இடையில் இல்லாமல் நாங்கள் வந்திருக்கிறோம். காவல்துறைக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத அளவில் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

நாங்கள் கடமை கண்ணியம் மிக்கவர்களாக உள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் நாங்கள் வந்திருக்கிறோம். எங்களது பேரணியை கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவருக்கும் 16 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தை பொற்கால ஆட்சியை கொடுத்த MGRன் திருவுருவ சிலைக்கும், ஜெயலலிதா அம்மாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து இருக்கிறோம்.

இந்த பேரணிக்கு வந்திருந்த வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு வெற்றி பெறும் என்பதற்கு அத்தாட்சி தான் இந்த பேரணி.
ஆளுங்கட்சி பேரணியா? எதிர்க்கட்சி பேரணியா என்று எண்ணுகிற அளவிற்கு இந்த பேரணி அமைந்திருக்கிறது

திருநாவுக்கரசர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும். திமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனசாட்சியை ஒத்திவைத்துவிட்டு, இவ்வாறு பேசுகிறார்

மனசாட்சிக்கு விரோதமாக பதில் சொல்லியிருக்கிறார்.
அன்றைக்கு வந்திருந்த விளம்பரங்கள் செய்திகள் அனைத்தும் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எவ்வளவு கொடூரமாக பாஞ்சாலி சபதம் போல், அன்றைக்கு மந்திரிகள் அம்மாவுடைய சேலையை பிடித்து இழுத்து தலைமுடியை பிடித்து தாக்கிய காட்சிகள். கழகப் பொதுச் செயலாளர் அங்கேயே இருந்த அண்ணன் எடப்பாடி அவர்கள் தோலுரித்து காட்டி இருக்கிறார்.

அவருடைய நல்ல எண்ணம் அண்ணன் எடப்பாடி அவர்கள் எவ்வளவு தூரம் இந்த அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம். அறந்தாங்கியில் இருக்கக்கூடிய திருநாவுக்கரசு யார் என்று தெரியுமா?. அவருக்கு விலாசம் கொடுத்தது அதிமுக தான். அன்றைக்கு பொதுச் செயலாளராக இருந்த புரட்சித்தலைவர் தான் அவருக்கு அமைச்சராக, துணை சபாநாயகராக அமர்த்தி அழகு பார்த்தவர்.

தன் அருகாமையில் வைத்திருந்து இளைஞர் அணிக்கு மாநிலத்துடைய செயலாளர் பதவியும் கொடுத்து அழகு பார்த்த புரட்சித்தலைவருக்கு, புரட்சித் தலைவருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா என்னதான் திருநாவுக்கரசு அவர்கள் கருத்து மாறுபாடு காரணமாக போனாலும், மீண்டும் அவரை அழைத்து மரியாதை கொடுத்து மதிப்பு கொடுத்த புரட்சித்தலைவி ஒரு மிகப்பெரிய பாதகத்தை பணியை இன்றைக்கு திருநாவுக்கரசு சொல்லியிருக்கிறார்
என்று தான் கருதுகிறேன்.

உண்மையில் அவர் மனசாட்சி பிரகாரம் சொல்லவில்லை.
மனசாட்சியை அடகு வைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும். அதனுடைய தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அவர் பேசி இருக்கிறார், என்றார்.

Views: - 241

0

0