அஜித்-க்கு போன் போட்டு ஷாக்கான பிரபல இயக்குனர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா.?

Author: Rajesh
5 May 2022, 12:02 pm
Quick Share

தமிழ் சினிமா நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர். அஜித். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

இதனிடையே, அஜித், விஜய்யை வைத்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்தவர் தான் நடிகரும், இயக்குனருமான பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஆக்சன், சென்டிமெண்ட் காமெடி கலந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பேரரசு நடிகர் அஜித்தை வைத்து எடுத்த திரைப்படம் தான் திருப்பதி இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகன் ஆத்விக் குறித்து கலகலப்பான விஷயம் குறித்து பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம் படம் வெளியாகி இருந்த நேரம்.. அப்போது நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன். அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு ஆத்விக் ‘தூக்கு துரை தான நல்ல இருக்காரு’ ‘ என்று கலாய்த்து பேசினாராம் ஆத்விக்.

Views: - 562

1

0