ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

Author: Rajesh
5 May 2022, 12:25 pm
Quick Share

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ஒரு காட்சியில், அக்னிச் சட்டி படத்துடன் கூடிய காலண்டர் இடம்பெற்றிருந்தது. அது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போல் உள்ளதாக கூறி, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது.

ஜெய்பீம் படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட சர்ச்சை தொடர்ந்து, நீடித்து வந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருந்தார். இத்துடன் ஜெய்பீம் மீதான சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், உள்நோக்கத்துடன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ருத்திர வன்னிய சேனா என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம்தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 853

0

0