விபத்தில் உயிரிழந்த ரசிகர் : மனம் நொந்த நடிகர் சூர்யா… உடனே செய்த செயல்.. இணையத்தில் வைரலான தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 8:22 pm
Surya Tirbute His Fan - Updatenews360
Quick Share

தனது ரசிகர் மன்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.

நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி நாமக்கல் – துறையூர் சாலையில் ஜெகதீஷ் சென்று கொண்டு இருந்போது சாலை வளைவில் லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.

Image

இதையடுத்து ஜெகதீஷை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த ஜெகதீஷ் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.

Image

இதையறிந்த நடிகர் சூர்யா, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு திடீரென வந்தார்.

Image

பின்னர் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீஷ் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, அவரது மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தைக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

Image

நடிகர் சூர்யாவை காண பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 919

1

0