மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்ட விவசாயி..இந்தாண்டும் விளைச்சலில் ஏமாற்றம் : விரக்தியில் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 5:00 pm
Nanguneri Suicide - Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை. இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது விவாசயத்தை நம்பியே இவரது குடும்பத்தின்ர் உள்ளனர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு வருடம் வாழை பயிரிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காலம் என்பதால் பலரும் பொருளாதார ரீதியில் பலர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர், இந்த நிலையில் வானுமாமலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார்,

இதனிடையே இந்த ஆண்டும் வானுமாமலை அவருடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்டுள்ளார். தற்போது பயிரிட்ட வாழை விளைச்சல் சரி வர இல்லாததால் வானுமாமலை மிகுந்த கவலையில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்தில் வயலுக்கு வைத்து இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். பின்னர் மயங்கிய அவர், தோட்டத்திலேயே கீழே விழுந்து கிடந்து உள்ளார்.

இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வானுமாமலை உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,

Views: - 377

0

0