பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் கேட்டு கடத்திய முன்னாள் திமுக கவுன்சிலர் : பொள்ளாச்சி அருகே பயங்கரம்!!

Author: Udayachandran
16 October 2020, 12:12 pm
Former Dmk Councilor Arrest - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சியில் பைனான்ஸ் அதிபரை கடத்தியதாக முன்னாள் திமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது, தலைமறைவான 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி சி. டி. சி .காலனியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது எதிரே காரில் வந்த மர்ம நபர்கள் சாந்தகுமாரை கண்களையும், கால், கை கயிறுகளால் கட்டி கோவை ரோடு தாமரைக்குளம் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

காரில் கடத்திய மர்ம நபர்கள் ஒரு கோடி பணம் கேட்டு துன்புறுத்தினர். சாந்தகுமார் பணம் தர மறுத்ததால் அவரைகத்தியை காட்டி மிரட்டி அடித்து துன்புறுத்தி கிணத்துகடவு – கோவை சாலையிட்ல சென்றாம் பாளையம் பகுதியில் விட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து சாந்தகுமார் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்தததில் பொள்ளாச்சி நகர 26வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணன் உட்பட 6பேர் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் ரா அருளராசு உத்திரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவக்குமார் அறிவுரைபடி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரபுதாஸ் தலைமையில் தனி படை அமைத்து மூன்று உதவி ஆய்வாளர்கள் அழகேசன், செந்தில் பெருமாள், மனோகரன் ஆகேயார் குற்றவாளிகளை தேடினர்.

இதில் மோதிரபுரம் பட்டத்தரசியம்மன் கோவில் பகுதியில் பதுங்கி இருந்த முன்னாள் திமுக கவுன்சிலர் கமலக்கண்ணன், நவீன்குமார், ஜான்சன், ஸ்டாலின் ஆகியேரை தனிப்படையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள, பாலாஜி, சதீஸ் ஆகியோரை கிழக்கு காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர், பைனாஸ் அதிபரை மிரட்டி ஒரு கோடி பணம் கேட்டு கடத்திலலில் ஈடுபட்ட திமுக நிர்வாகியின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 46

0

0