குளச்சலால் வந்த குடைச்சல்! நோய் பரவும் அபாயம்.!!

17 August 2020, 2:17 pm
Nagercoil Crowd - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை மலிவால் வியாபாரிகள் பொதுமக்கள் குவிந்த நிலையில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம், மீனவர்களும் ஐநூறுக்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது கடந்த ஒரு மாதத்திற்கு முன் தடையை நீக்கிய அரசு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்க பல கட்டுபாடுகளை விதித்தது.

அதன்படி போலீசாரின் கண்காணிப்பில் போதிய சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சுதந்திர தின விடுமுறை என்பதாலும் நேற்று ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று அதிக அளவில் மீன்களுடன் கரை திரும்பினர்.

அதிக அளவில் மீன்கள் பிடிபட்டதாலும் வெளி மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய பெரிய அளவில் வராததால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்க குவிந்தனர். ஆனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு முக கவசம் அணியாமலும் கும்பலாக மீன் கொள்முதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Views: - 33

0

0