அந்த மனசு இருக்கே… அதான் சார் கடவுள்… கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் குடம்… உதவி செய்த வெளிநாட்டு பெண்…குவியும் பாராட்டு..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
9 June 2022, 4:31 pm
Quick Share

உடைந்த பிளாஸ்டிக் குடம் கழுத்தில் சிக்கியபடி சுற்றித்திரிந்த தெருநாய்க்கு உதவிய வெளிநாட்டு பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தூத்துக்குடியில் தெரு நாய் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடம் சிக்கி கொண்டு அவதிப்பட்டு வந்து இதைபார்த்த வெளி நாட்டைச் சேர்ந்த இளம் பெண்மணி எடுத்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் மில்லர்புரம் அருகே தெருநாய் ஒன்று கழுத்தில் காலி பிளாஸ்டிக் உடைந்த குடம் தலையில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டு கொண்டிருந்தது. அந்த சாலையில் சென்ற அனைவரும் இந்த நாயை வேடிக்கை பார்த்தவாறே சென்றனர்.

ஆனால் அந்த சாலையில் சென்ற வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்மணி, அந்த தெரு நாய் யிடம் பிஸ்கட் கொடுத்து தனது அன்பை பரிமாறிக் கொண்டார். இதைத்தொடர்ந்து, அந்த நாயை ஒரு கயிறு வைத்து பிடித்துக்கொண்டு, அதன் கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்த காலி பிளாஸ்டிக் குடத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டார்.

அப்போது அந்த நாய் அவரை சீறியபடி ஆக்ரோஷத்துடன் பாய்ந்து. பின்னரும் அவருடைய விடா முயற்சியாக நாய்க்கு பிஸ்கட் கொடுத்து பக்குவமாக அந்த உடைந்த பிளாஸ்டிக் குடத்தை எடுத்தார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அன்கா என்பது தெரிய வந்தது.

Views: - 484

0

0