சுதந்திர போராட்டத் தியாகியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு ; கைகொடுத்த சமூக சேவகர்… வளர்ப்பு நாயின் செயலால் நெகிழ்ந்து போன குடும்பம்!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 2:34 pm
Quick Share

மறைந்த 87 வயது சுதந்திரப் போராட்ட பெண் தியாகியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், ஈமச்சடங்கு நடத்தி நல்லடக்கம் செய்த சமூக சேவகரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருவண்ணாமலை அடுத்த சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வருபவர் தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தேசப்பிரிவினையின் போது, இவர் குஜராத்திற்கு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வந்து அங்கு வசித்து வந்தார். குறிப்பாக, இவர் காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய போது, அந்தப் போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், மும்பையில் ஆசிரியராக பணியாற்றியவர் திருமணம் செய்யவில்லை. சிறிது காலம் முன்பாக திருவண்ணாமலை பகுதி வசித்து தனது அண்ணன் மகன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், நேற்று மாலை அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, மறைந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த 2,275 உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு நடிகர் ரஜினிகாந்த் மூலம் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனத்தைப் பெற்ற சமூக சேவகர் மணிமாறன் இன்று இறந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை முறைப்படி நல்லடக்கம் செய்தார்.

இந்த நிகழ்வின் போது, மறைந்த சுதந்திர போராட்ட வீராங்கனை தான் வளர்த்த வளர்ப்பு நாய் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் இறந்த வீட்டில் அவரது உடலை சுற்றி சுற்றி வந்ததும், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வாகனத்தில் ஏற்றும் போது காளபைரவர் என அழைக்கப்படும் வளர்ப்பு நாய் வாகனத்தில் ஏறியது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 730

0

0