சாலையோரம் வீசப்படும் பழங்கள்.! இ-பாஸ் ரத்து செய்ய கோரிக்கை.!!

12 August 2020, 7:28 pm
Madurai Fruits Waster - Updatenews360
Quick Share

மதுரை : இ-பாஸ் பிரச்சனையால் போதிய விற்பனையின்றி அழுகிய நிலையில் சாலையோரம் பழங்கள் கொட்டப்பட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய பழ சந்தையான மதுரை பழசந்தையிலிருந்து சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பழம் காய்கறிகள் எடுத்துசென்று விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வர இ-பாஸ் நடைமுறை உள்ளதால் ஏராளமான வியாபாரிகள் போதிய வாகனம் கிடைக்காத நிலையில் மதுரை பழ அங்காடிக்கு வருகைதருவதை குறைத்துகொண்டனர்.

இதன் காரணமாக போதிய பழங்கள் விற்பனை ஆகாத நிலையிலும்,உரிய விலை இல்லாத நிலையிலும் சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு, பலா உள்ளிட்ட பழங்கள் ஒரு சில நாட்களில் அழுகி வீணாகும் நிலையில் வியாபாரிகள் பழங்களை குப்பைகளில் கொட்டிசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதிலும் உழைத்த விவசாய பொருளை தெருவில் வீசி செல்லும் நிலையை மாற்ற சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்தால் மட்டுமே இது போன்ற இழப்புகளை தடுக்க முடியும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

Views: - 9

0

0