காரில் வந்திறங்கிய களவாணி கும்பல்…வீட்டின் முன் நிறுத்தியிருந்த காஸ்ட்லி பைக் அபேஸ்: சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த உரிமையாளர்..!!

Author: Rajesh
19 March 2022, 3:47 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை காரில் வந்த மர்ம கும்பல் திருடிச் செல்லும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இருசக்கர வாகத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் காரில் இருந்து இறங்கி சர்வசாதாரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியாத்தம் பகுதியில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து வருவதாகவும், இதனால் ரோந்து பணியை அதிகரித்து, சிசிடிவி கேமிராக்களை அதிகம் பொறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

l

Views: - 1380

0

0