மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது : டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 8:07 pm
Dgp - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்தார்.

பின்னர் அலுவலகத்தில் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் கொள்ளை வழக்கு, செல்போன் திருட்டு போன்ற வழக்கில் குற்றவாளிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள் செல்போன்கள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் என 68 பேருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் :- திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கொள்ளை போன வழக்கில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு காவல்துறையினர் சென்று வெளிநாட்டு குற்றவாளி உட்பட ஏராளமான குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் என ஒரு கோடி 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த காலங்களில் அதிக அளவில் கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் காரணமாக கஞ்சா செடி பயிர் செய்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒரிசா மற்றும் ஆந்திராவிலிருந்து கஞ்சா விற்பனைக்காக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் தேனி மாவட்டத்திலும் 80 சதவீதகத்திற்கும் மேல் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக கஞ்சா பயன்படுத்தி வந்தவர்களில் ஒரு சிலர் மருந்து கடையில் மருந்து, மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுப்பதற்கான கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதை போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் போதை பொருள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 303

0

0